தரங்கம்பாடி, மே 19-நாகை மாவட்டம் பூம்புகாரை ஒட்டியுள்ள வானகிரியில் உள்ளஇறால் பண்ணைகளால் வாழ்வாதாரம் சீரழிவதாகக் கூறி ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி ஆறு சங்கமிக்கும் முகத்துவாரத்தை ஒட்டியுள்ள கிராமமான வானகிரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள இவர்களின்வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் இக்கிராமத்தை சுற்றியும், காவிரி ஆற்றின் கரைப் பகுதியிலும் இறால் பண்ணைகள் அமைந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து வானகிரி மீனவபஞ்சாயத்தார்கள் கூறும்போது, சுனாமி பேரழிவுக்கு பிறகு மேலவானகிரியில் அமைக்கப்பட்டுள்ள 10 இறால் பண்ணைகளால் நீர் ஆதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி விட்டது. நிலத்தடி நீர் முற்றிலும் உப்பாகி விட்டதால் அன்றாட பயன்பாட்டிற்கு கூட தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை, குடியிருப்புகளை சுற்றி பண்ணைகள் இருப்பதால் வீடுகளின் சுவர்கள் அரிக்கப் பட்டு ஆபத்தான நிலையில் உள் ளது.மேலும் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கடலில் கலக்க விடுவதால் 3 மீட்டர்தொலைவில் இருக்க கூடிய வேலா,உளூவ, கொம்பன் சுறா, திருக்கை,சங்கு உள்ளிட்ட மீன் வகைகள் அங்குஇல்லாமல் காணாமல் போயுள் ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன் இனங்கள் அழிந்து வருகிறது என்றனர். காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள் ளதாக குற்றம்சாட்டும் மீனவபஞ்சாயத்தார்கள் காவிரி கரையோரத்திலேயே பண்ணைகளை அமைத்துள்ளதால் கழிவுகளை அவர்கள் கடலில் வெளியேற்ற வசதியாக உள்ளது. மேலும் 100 மீட்டர்தொலைவு அகலம் இருந்த காவிரியை ஆக்கிரமித்து, சுருக்கி 30 மீட்டராக மாற்றி விட்டனர். காவிரி, கடலில் கலக்கும் இந்த இடத்தை தங்களின் லாப வெறிக்காக விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறினர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இறால் பண்ணைகளை நிரந்தரமாக மூடுவதோடு, காவிரியாற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்பை அகற்றி, காவிரி முகத்துவாரத்தை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி ஆற்றில் இறங்கி கண்டனமுழக்கங்களை எழுப்பி நடைபெற்றபோராட்டத்தில் 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக நடவடிக்கை இல்லாதநிலையில் தொடர் போராட்டங் களை நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.