tamilnadu

img

பொங்கல் விளையாட்டுப் போட்டிகளால் களைகட்டிய பரிசுப் பொருட்கள் விற்பனை

தஞ்சாவூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். விளையாட்டுப் போட்டிகள், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், சைக்கிள் பந்தயம், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம் என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படுவது உண்டு.  இதில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவர் திருநாளான வெள்ளிக்கிழமை அன்று உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், சோப்பு டப்பா, குடங்கள்  உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் பரிசாக வழங்கப்படும். இதனால் பரிசுப் பொருட்களை கடைவீதி கடைகள் ஆகியவற்றில், விளை யாட்டுப் போட்டி அமைப்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் கடைகளில் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.