மன்னார்குடி, பிப்.14- திருமக்கோட்டை அருகே தென் பரை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, தென்பரை, தென்பரை மேலக்காடு, தெற்கு தென்பரை துவக்கப்பள்ளிகள் ஆகிய 4 அரசு பள்ளிகளுக்கு ரூ 7 லட்சம் நிதி வழங்கும் விழா நடை பெற்றது. தென்பரை அரசு தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை தொடங்கி இந்திய ஆட்சிப் பணியை முடித்து ஐநா சபையில் இந்தியா வின் முதல் தணிக்கை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற டி.ஆர். கிருஷ்ணமாச்சாரியார் தனது கிராமத்தில் உள்ள அனைத்து பள்ளிக் குழந்தைகளும் வாழ்க்கை யில் சாதனையாளர்களாக உரு வாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண் பெறும் மாண வர்கள், விளையாட்டில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்த கடந்த ஆண்டு வரை ரூ. 8 லட்சம் வைப்பு நிதி வழங்கி இருந்தார்.
மேலும் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.7 லட்சம் வழங்கி உள்ளார். இதற்கான விழா தென்பரை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலை வர்கள் ராஜகோபால், ஆவணி, தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர்கள் நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்பரை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார். . விழாவில் ஐநா சபையின் தணிக்கை இயக்குனராக பணி யாற்றி ஓய்வு பெற்ற டிஆர் கிருஷ்ண மாச்சாரியார் பங்கேற்று 4 பள்ளிக ளுக்கான வைப்பு தொகையாக ரூ 7 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தேசிய திறனாய்வு மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆரியா, சுதனீஸ்வரன், ஹரிராஜ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. தென்பரை துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) கலைச் செல்வி, தென்பரை மேலக்காடு பள்ளி தலைமையாசிரியர் நாகம் மாள், தெற்கு தென்பரை தலைமை யாசிரியர் ரவி ஆகியோர் வாழ்த் துரை வழங்கி பேசினர். கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் சுப்பிரமணியன் விழாவை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் பாலசிங் ஜெபகுமார் நன்றி கூறினார்.