education

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15ல் நீட் பயிற்சி

சென்னை:
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும். தனியார் நிறுவனம் மூலம் 4 நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என இணைய வழி வகுப்பு நடைபெறும்.இதுதொடர்பாக அரசு மற்றும் அரசுஉதவி பெறும் மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.