முசிறி, ஜூன் 2-தா.பேட்டை அடுத்த எம்.புதுப்பட்டி(மேற்கு) அழகாப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வருவாய்த்துறை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி தாசில்தார் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சமூக நல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் குகன், மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் மணி வரவேற்றார். கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார் நன்றி கூறினார்.முகாமில் பட்டா மற்றம், வாரிசு சான்றிதழ், உழவர் அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 59 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டன. 5 மனுக்கள் இதர துறை அலுவலர்களின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக முசிறியிலிருந்து அழகாப்பட்டி செல்லும் தார்ச்சாலை சீரமைக்க வேண்டும், நேரு நகரில் சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.