tamilnadu

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக! சிபிஎம் கையெழுத்து இயக்கம்

 திருச்சிராப்பள்ளி, ஆக.8- 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8ம் வகுப்புகளின் தேசிய அள விலான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இடைநிலை கல்வியாக கருதப்பட்டு 8 பருவத் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளியில் 15 வருடம் பயின்று மேல்நிலைப்பள்ளி கல்வி சான்று பெற்றாலும், கல்லூரிகளில் சேர அது தகுதியாக கருதப்படாமல் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்விற்கு விண்ணப்பித்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்பன போன்ற இலவச கல்வியை தகர்க்கின்ற பல பாதகமான அம்சங்கள் கொண்ட பாஜக அரசின் புதிய வரைவு கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறை யூர் ஒன்றியக்குழு சார்பில் புதனன்று தெருமுனை பிரச்சா ரம் மற்றும் கையெழுத்து இயக்கம் துறையூர் பேருந்து நிலையம், பாலக்கரை, முசிறி பிரிவுசாலை பகுதிகளில் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடை பெற்றது. பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.வி.எஸ்.இந்துராஜ், சங்கிலிதுரை, ரவி, சந்திர சேகரன், தங்கவேல், பொன்னுசாமி, லிங்கராணி, புஷ்பம், சரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.