tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் வேலையிழப்பு: மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் கையெழுத்து இயக்கம்

நாகப்பட்டினம்/ திருவாரூர், ஜூலை 1- பெட்ரோல், டீசல், மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், மின் பொறியாளர்களிடம் மனு அளிக்கும் நிகழ்வுகளும் நடை பெற்றன.
நாகப்பட்டினம்
சிக்கல் கடைத்தெருவில் சிபிஎம் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு  தலைமை வகித்தார். கட்சியின் மாவ ட்டச் செயலாளர் நாகைமாலி கண்டன  உரையாற்றினார். சிக்கல் இளமின் பொ றியாளரிடம் மனுக்கள் அளிக்க ப்பட்டது.  கீழ்வேளூர் கடைத்தெருவில் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெய ராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மா ரிமுத்து கண்டன உரையாற்றினார். கீழையூர் ஒன்றியம், மேலப்பிடா கையில் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.
திருமருகல்
திருமருகல் கடைத்தெருவில் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெய பால் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்டக்குழு உறு ப்பினர் வழக்கறிஞர் ப.சுபாஷ் சந்தி ரபோஸ் கண்டன உரையாற்றினார். வேதாரணியம் ஒன்றியம், கரியா ப்பட்டினத்தில் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்துக் கண்டன உரையாற்றினார். ஆயக்கா ரன்புலத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன் தலைமையிலும், தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பா ட்டில் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஏ.வேணு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு கட்சியின் மயிலாடு துறை வட்டச் செயலாளர் சி.மேகநா தன் தலைமை வகித்தார். இதேபோல், சீர்காழியில் சிபிஎம் வட்டச் செய லாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலை மையிலும் குத்தாலத்தில் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம் செம்பனார்கோ வில் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் பெட்ரோல், டீசல் விலை உய ர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பா ட்டம் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடை பெற்றது. மயிலாடுதுறை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வட்ட செய லாளர் சி.மேகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறு ப்பினர் டி.கணேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். குத்தாலம் கடைத் தெருவில் ஒன்றியச் செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.
சீர்காழி
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து கொட்டும் மழை யில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில்  கடைவீதியில் வட்டக்குழு உறுப்பினர்  கே.நாகையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன் கண்டன உரையாற்றினார். கொள்ளிடம் பகுதி ஆச்சாள்புரம் கடைவீதியில் வட்டக் குழு உறுப்பினர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
திருவாரூர்
மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் உறுப்பினர்கள் மின்துறை பொறியாளர் கிருஷ்ணவேணியிடம் மனுக்களை அளித்தனர்.
முத்துப்பேட்டை
மக்கள் சந்திப்பு மற்றும் கையெ ழுத்து இயக்கம் முத்துப்பேட்டை நக ரில் நடைபெற்றது. மக்களிடம் பெற ப்பட்ட ஆயிரம் கையெழுத்திட்ட விண்ணப்பங்களை முத்துப்பேட்டை மின்வாரிய பொறியாளரிடம் சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பி னர் கே.வி. ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் சி.செல்லதுரை ஆகியோர் அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருத்துறைப்பூண்டி நகர குழு  சார்பில் திருத்துறைப்பூண்டி காமரா ஜர் சிலை அருகே நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகர செய லாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை  வகித்தார். ‘தாங்க முடியாத மின்  சுமை’ என்ற வாசகத்தை கையி லேந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.