திருச்சி:
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்தும் அரசின் பரிசீலனையில் உள்ளது. மாநிலங்களவையில் காலியாகும் 6 தமிழக எம்.பி.க்கள் பதவிகளில், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கட்சியின் தலைமை கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.