திருச்சிராப்பள்ளி, நவ.11- திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலா ளர் சங்கத்தின் (சிஐடியு) ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று வெண்மணி இல்லத்தில் மாவட்ட தலை வர் சேகர் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், கடந்த செப் டம்பர் 5-ந் தேதி கோட்டாட்சி யர் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு மாதங்களில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை மணல் குவாரி திறக்க வில்லை. எனவே வருகிற 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன் மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்களின் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபடுவது என முடி வெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமை யில் ஞாயிறு அன்று மாலை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மணல் மாட்டு வண்டி சங்க செயலாளர் சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள், அதிகாரி கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜனவரி 10-ஆம் தேதிக்குள் மணல் குவாரி திறக்க ஏற்பாடு துரிதமாக செய்யப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டது.