tamilnadu

img

ஆட்சியர் இடமாற்றத்தால் மீண்டும் வந்த சோதனை

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்

கும்பகோணம், நவ.18-  தஞ்சை மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மாட்டு வண்டி  தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தி ற்கு ஆற்றில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரியும் தனி குவாரி அமைத்திட வலியுறுத்தியும் பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு கடந்த மாதம் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறையினர் பேச்சுவார்த்தையில் கொள்ளிடம் ஆற்றில் தேவனோடை பகுதியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அதற்காக மணல் அள்ளும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் பட்டி யலை வழங்குமாறும் அதற்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள் பட்டியலை கோட்டாட்சியர், வட் டாட்சியர் ஆகியோருடன் கையொப் பம் பெற்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அதிகாரி களிடம் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதன்படி பட்டியலிலுள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு பகுதி பகுதியாக மணல் அள்ள அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதில் ஒரு பகுதி தொழிலாளர்கள் மணல் குவாரி அமைக்கப்பட்ட தேவன் ஓடை பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு ஒப்புதல் வாங்க சென்ற பொழுது மாட்டு வண்டி தொழி லாளர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீண்டும் கும்பகோணம் பொதுப் பணித் துறை அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெய பால் தலைமையில் முற்றுகை போராட்டம் செய்தனர். மீண்டும் அதி காரிகள் அழைத்து பேச்சுவார்த்தை யில் சம்பந்தப்பட்ட பொறியாளர் பணி  உயர்வு மற்றும் மாவட்ட ஆட்சியர் இடம் மாறுதல் ஆனபடியால் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சிய ரிடம் அனுமதி பெற்ற பிறகு ஆட்சிய ரின் உத்தரவின் படி மணல் எடுக்க  அனுமதிக்கப்படும்  என தெரிவித்த னர். அதற்கு மாட்டு வண்டி தொழிலா ளர்களின் சங்க (சிஐடியு) தலை வர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் நாங்கள் மாட்டு வண்டி யில் மணல் அள்ளுவதற்கு தடை  செய்யக் கூடாது என வலியுறுத்தி னர். ஆனால் மீண்டும் அதிகாரிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியரிடம் நடந்த தகவலை கூறி அனுமதி பெற்ற பிறகு மணல் அள்ள லாம் என உறுதியாக தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் வருகிற திங்கட்கிழமைக்குள் உரிய அனுமதி வழங்காவிட்டால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்து டன் பொதுப்பணித்துறை அலுவல கத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி. கண்ணன், சிஐடியு துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, மாட்டு வண்டி தொழி லாளர் சங்க பொறுப்பாளர்கள் கோவிந்தராஜன், லட்சுமணன், செந்தில்குமார், உலகநாதன், தங்கை யன் சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.