அறந்தாங்கி, ஜூன் 8- மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நவாஸ் கனிவெள்ளி அன்று அறந்தாங்கி பகுதி மனமேல்குடி பகுதி ஆவுடையார் பகுதிகளில் நன்றி தெரிவித்து பேசினார். அவருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி திமுக ஒன்றிய செயலாளர்கள் உதயம் சண்முகம் பொன் கணேசன் சக்தி ராமசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா திமுக முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கவிதா அண்ணாதுரை சோமு மற்றும் கூட்டணி கட்சியினர் நவாஸ்கனி எம்பிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.