வேல்முருகன் குற்றச்சாட்டு
தரங்கம்பாடி, ஏப்.5-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் செ.ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரபொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர்வேல்முருகன், பாமகவின் பித்தலாட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.3 மாதங்களுக்கு முன்பு வரை எடப்பாடி ஆட்சியில் கனிம வளங்களை 70 லட்சம் கோடி அளவிற்கு கொள்ளையடித்துள்ளனர் என்றும், டயர் நக்கிகளின் ஆட்சி என்றும், மோடி ஆட்சிக்குபூஜ்ஜியத்திற்கு கீழ் மதிப்பெண் போடுவேன் என பேட்டியளித்த ராமதாசு, அவரது மகன் அன்புமணி தற்போது வாங்கவேண்டியதை வாங்கிக் கொண்டு கூட்டணி சேர்ந்துள்ளனர்.தங்களது சுயநலத்துக்காக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மோத விடும் பாமகவின் பித்தலாட்டம் இனி எடுபடாது. எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியின் காண்டிராக்டில் அமையவுள்ள 8 வழிச்சாலைக்கு எடப்பாடி வாங்கிய 4 ஆயிரம் கோடி கமிஷனில் ராமதாசுக்கு எத்தனை ஆயிரம் கோடி.? இனி அன்புமணிக்கு மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம் தான். தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதிகள் முழுவதும் செங்கொடியின் வீரஞ்செறிந்த போராட்டங்களால் வளர்க்கப்பட்டவை. இங்கு பாஜக பாச்சா எல்லாம் பலிக்காது. பாழாய்போன பாரதீய ஜனதா கட்சியை தூக்கிஎறிவோம். 40 தொகுதியிலும் வெற்றிப்பெறுவோம் என ஆவேசமாய் வேல் முருகன் உரையாற்றினார்.திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.எம் அன்பு,முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜ்குமார்(காங்கிரஸ்), அருட்செல்வன்(திமுக) மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர்.