மன்னார்குடி, ஏப்.8-திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி ஒன்றிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் ஜி.பாலு, ஒன்றிய செயலாளர் ஐ.வி.குமரேசன், மாவட்ட பிரதிநிதி டி.செல்வம், தி.ஜெகஜீவன்ராம், சிறுபான்மை நல அமைப்பாளர் ஒய்.ஏ.நவாபுதீன், சிபிஐ சார்பில் ஒன்றிய செயலாளர்ஆர்.வீரமணி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம். திருஞானம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. தங்கவேலு, மன்னன்.மணி, வழி.லெட்சுமணன், விசிக சார்பில்இளங்கோ பா.நிலவன், மா.சுடர்மொழியன் உள்ளிட்டோர் வாக்கு சேரிப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.திங்கட்கிழமை காலை 7 மணிக்கு சிக்கவெளி கிராமத்தில் துவங்கிய வாக்கு சேகரிப்பில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் அணிவகுக்க சித்திரையூர், மாவூர் ரயிலடி, பெருமதுக்கூர், திருநாட்டியத்தாங்குடி, ராஜாங்கட்டளை பண்டாரவாடை, ஆதிவிடங்கம், பூந்தோட்டம் பாலக்குறிச்சி, மணக்கரை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். எல்லா கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.