தஞ்சாவூர்: தஞ்சையில், மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியலில் 19 லட்சத்து 63 ஆயிரத்து 607 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்து 595, பெண் வாக்காளர்க ளின் எண்ணிக்கை 10 லட்சத்து 2 ஆயிரத்து 907, மூன்றாம் பாலினத்தவர் 105 ஆகும். அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி 22 வரை நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் ஆண் வாக்காளர் 21 ஆயிரத்து 846 பேர், பெண் வாக்காளர் 25 ஆயிரத்து 948 பேர், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ஆக மொத்தம் 47 ஆயிரத்து 816 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டனர். இறந்து போன, இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் 1,561, பெண் 1,941 ஆக 3,502 பேர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலின் படி சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை வருமாறு:- திருவிடைமருதூர் ஆண்-1,24838, பெண் 1,25,790, மூன்றாம் பாலினத்தவர் 7 ஆக கூடுதல் 2,50,635. கும்பகோணம் ஆண்-1,29,531, பெண் 1,34,700, மூன்றாம் பாலினத்த வர் 10 ஆகக் கூடுதல் 2,64,241. பாபநாசம் ஆண்-1,25,269, பெண் 1,29,596, மூன்றாம் பாலினத்த வர் 14 ஆகக் கூடுதல் 2,54,879. திருவையாறு ஆண் 1,28,340, பெண் 1,34,119, மூன்றாம் பாலினத்த வர் 9 ஆகக் கூடுதல் 2,62,468. தஞ்சாவூர் ஆண் 1,35,287, பெண் 1,47,041 மூன்றாம் பாலினத்த வர் 52 ஆகக்கூடுதல் 2,82,380. ஒரத்தநாடு ஆண்- 1,15, 683, பெண் 1,21,069 மூன்றாம் பாலினத்தவர் 3 ஆகக்கூடுதல் 2,36,755. பட்டுக்கோட்டை ஆண்-1,15,442, பெண் 1,24,833, மூன்றாம் பாலினத்தவர் 22 ஆகக்கூடுதல் 2,40,297. பேராவூரணி ஆண்- 1,06,490, பெண் 1,09,766, மூன்றாம் பாலினத்தவர் 10 ஆகக் கூடுதல் 2,16,266. ஆக மாவட்டம் முழுவதும் ஆண்கள் 9,80,880, பெண்கள் 10,26,914, மூன்றாம் பாலி னத்தவர் 127 என மொத்தம் 20,07,921 பேர், வாக்காளர் பட்டியலில்இடம் பெற்றுள்ளனர்.