திருச்சிராப்பள்ளி: திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை சி.இ. துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா பள்ளியின் தாளாளர் ஜேம்ஸ் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறம் மக்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், இப்பள்ளிக்கு திருச்சி மாவட்ட அறம் மக்கள் நல சங்கம் சார்பாக கம்ப்யூட்டர் லேப்பிற்கு தேவையான உபகரணங்களை சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் வழங்கி அதை துவக்கி வைத்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகளை வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அறம் மக்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமையாசிரியர் நிர்மலாகிறிஸ்டி வரவேற்றார். ஓவிய ஆசிரியர் பிரபு நன்றி கூறினார்.