திருச்சிராப்பள்ளி, ஜூலை 20- புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக் கோரி சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அநியாயமாக உயர்த்தப்பட்ட இன்சூ ரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள் பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டு நர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று மாலை ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், செயலா ளர் மணிகண்டன், பொருளாளர் அன்பு செல்வம், மாவட்ட நிர்வாகி அழகப் பன், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து ஆகியோர் பேசினர். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.