tamilnadu

img

பொங்கல் விளையாட்டு விழா

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் தவிட்டுபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டி நடைபெற்றது. விழாவிற்கு வாலிபர் சங்க கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்ட குழு உறுப்பினர் நித்தியானந்தன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தீபா சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் பாலு, செயலா ளர் நாகராஜ், பொருளாளர் ஆனைமுத்து, முன்னாள் வட்டச் செயலாளர் எம்.கண்ணன், வட்டத்தலைவர் இளையராஜா, பொருளாளர் எஸ்.இளையராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் சங்கர், ராஜ், வட்ட துணைச் செயலாளர் மாசிலாமணி, கட்டுமான தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் பூமாலை, வட்டச் செயலாளர் முத்துசாமி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருண், பிரசன்னா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீபாவிடம் கிளை சார்பாக இளைஞர் முழக்கம் சந்தா வழங்கப்பட்டது.