tamilnadu

பெரம்பலூர் மற்றும் மன்னார்குடி செய்திகள்

பெரம்பலூரில் இன்று  சமரச தீர்வு மைய முகாம்


பெரம்பலூர், ஏப்.8-பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செவ்வாயன்று காலை 9.30 மணிக்கு சமரச தீர்வு மையம் நடைபெறஉள்ளது. இதில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், சமரச வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கஉள்ளனர். எனவே வழக்கு தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி(பொ) என்.விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி


மன்னார்குடி, ஏப்.8-தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் ராகா- ஓய்வுபெற்ற வேளாண்மை பட்டதாரிகள் சங்க உறுப்பினர் களுக்காக சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராகா-ஓய்வு பெற்ற வேளாண்மை பட்டதாரிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கோ.சுப்பிரமணியன்(இணை வேளாண்மை இயக்குனர்-ஓய்வு)தலைமையேற்று நடத்தினார். நிகழ்ச்சியில் மீனாட்சிமருத்துவமனை டாக்டர்கள் சரவணவேல், கார்த்திகேயன்மற்றும் உணவியல் நிபுணர் ஜெயந்தி ஆகியோர் மருத்துவஆலோசனை வழங்கினர். இதில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.