பெரம்பலூர், ஏப்.19- பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.15 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று மாநில அளவில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 இடங்கள் முன்னேறியுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 71 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 4,155 மாணவர், 4,255 மாணவியர் என மொத்தம் 8,410 பேர் எழுதினர். இதில் 3,904 மாணவர், 4,098 மாணவியர் என மொத்தம் 8,002 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 93.96 சதவீதமும், மாணவிகள் 96.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 95.15 ஆகும். கடந்த ஆண்டு 94.10 சதவீதம் பெற்று மாநில அளவில் 12வது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 95.15 சத
வீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாவட்ட அளவில் பெரம்பலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி 600-க்கு 584 மதிப்பெண்ணும், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரித்தி, சவுமியா ஆகியோர் 582 மதிப்பெண்ணும், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவன் பாதுஷா 573 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன், கோல்டன் கேட்ஸ் உள்பட 13 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.15 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று மாநில அளவில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.