tamilnadu

img

தொடர் விபத்தால் மக்கள் அவதி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 18- ஸ்ரீரங்கம் 3வது வார்டு வடக்கு தேவி தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன் சாக்கடையை சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் இந்த பள் ளத்தை மூடப்படாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழி யாக செல்வோர் அந்த பள்ளத்தில் விழுந்து தொடர் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 15 நாட்களுக்கு முன் மனு கொடுத்தும் இதுவரை நட வடிக்கையும் இல்லை.  இந்நிலையில் கடந்த 3 நாட்க ளுக்கு முன் இந்த வழியாக பள்ளிக்குச் சென்ற ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி சைக்கிளுடன் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். முதிய வர் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் இந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார்.  இந்த பள்ளத்தால் ஏற்படும் தொடர் விபத்தை தடுக்க வலியுறுத்தியும், நட வடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வா கத்தை கண்டித்தும் வாலிபர் சங்கம் சார்பில் சாக்கடை பள்ளத்தில் கம்பம் நட்டு அதற்கு மாலை அணிவித்து, படையல் போட்டு இறுதி சடங்குகள் நடத்தி நூதன போராட்டம் திங்க ளன்று நடைபெற்றது. வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். பகுதித் தலை வர் ஜெயக்குமார், பொருளாளர் சந்துரு, துணை செயலாளர் லோகு, முத்து, சசி, சுப்பிரமணி, கண்ணன், நந்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.