திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- திருச்சி மாநகராட்சி 49வது வார்டு சின்னசாமி நகர் சி பிளாக் அருகில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட தால் சாக்கடை நீர் பாதாள சாக்கடை யின் இணைப்பு வழியாக வீட்டிற்குள் செல்கிறது. மேலும் தெருக்களிலும் சாக்கடை நீர் வழிந்தோடுவதால் அப் பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழல் உள்ளது. எனவே பாதாள சாக்கடை யில் உள்ள அடைப்பை உடனே சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ரபீக் தலைமையில் சிபிஎம் கட்சியினர் மற்றும் அப்பகு தியினர் முகத்தில் மாஸ்க் அணிந்து மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மேற்கு பகுதி செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன் பேசினார். சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் வள்ளி, சித்ரா, கிளை செயலாளர் மஜீத், முன வர்ஷா, அப்பாஸ் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்த கோரிக்கை மனுவை மாநக ராட்சி அதிகாரிகளிடம் வழங்கினர். சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பாதாள சாக்கடை அடைப்பை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இத னையடுத்து போராட்டத்தை கை விட்டு அனைவரும் கலைந்து சென்ற னர்.