districts

img

கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்: கருத்துகேட்பு கூட்டத்தை எதிர்த்து சிபிஎம் போராட்டம்

புதுச்சேரி,மார்ச் 9- கார்ப்ரேட் நிறுவனங் களுக்கு ஆதரவான கடற் கரை மண்டல மேலாண்மை திட்டத்தை எதிர்த்து மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில்  புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்கள்,பொது மக்களுக்கு எதிராக கடற் கரை மண்டல மேலாண்மை திட்டம் என்ற பெயரில் என். ஆர்.காங்கிரஸ், பாஜக கூட் டணி அரசு சுற்றுலா வரை படம் ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதர வாக கடலோர மக்களின் குடி யிருப்புகள், பாதைகள், பள்ளிக்கூடம், கோயில், விளையாட்டு மைதானம். மீன் இறக்கும் தளம், படகு கள் நிறுத்தும் இடம், வளை கள் பழுது பார்க்கும்  இடங்கள் எதையும் பதிவு செய்யவில்லை.  இத்திட்டத்தை அமல் படுத்தும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் மாசு கட்டு பாட்டு வாரியம் சார்பில் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறு கிறது. கடலோர பகுதி மக்க ளுக்கு எதிரான இக்கூட் டத்தை  ரத்து செய்யக்கோரி அண்ணா நகரிலுள்ள மாசு கட்டுப்பாட்டு  வாரிய அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் சீனிவாசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்தியக் குழு உறுப்பி னர் பி. சண்முகம் கோரிக்கை களை விலக்கி பேசினார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மூத்தத் தலை வர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச் சந்திரன், தமிழ்ச்செல்வன், சத்தியா, கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, உழ வர்கரை நகர செயலாளர் ராம்ஜி, மாநிலக் குழு உறுப் பினர்கள் ராமசாமி, சங்கர், சரவணன், இளவரசி, ஆனந்து,சஞ்சய் உள்ளிட் டோர் பேசினர். ரத்து செய்யப்படும் போராட்டத்தின் முடி வில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறை இயக் குநர் ரமேஷை  சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட இயக்குநர் புதுச்சேரி, காரைக்காலில் நடைபெற விருக்கும் இந்த கருத்து கேட்புக்கூட்டம்  ரத்து செய்வதற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.