tamilnadu

img

எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டு தா.பாண்டியன் தீவிர பிரச்சாரம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.8-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டும்அவரை ஆதரித்தும் கம்யூனிஸ்ட்கட்சி தேசியக்குழு உறுப்பினர்தா.பாண்டியன், திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையம் பி.எஸ்.ஆர் நினைவு மண்டபம் அருகில் பேசினார். இதில் சி.பி.எம் கட்சி சி.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் ரகுராமன், சி.பி.ஐ சார்பில் மாநில செயற்குழு கோ.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம், மு.சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன், தி.மு.க சார்பில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழக தோழர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு மற்றும் ஒன்றிய, நகரக்குழு தோழர்கள் 500-க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்