tamilnadu

விபத்தில் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

சீர்காழி, ஜூன் 28- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கண்ணுக்கினியனார் கோயில் கிராம மெயின் ரோட்டில் உள்ள மதகில் அதே கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் செல்வம்(45), அகரவட்டாரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மகன் கிருஷ்ணமூர்த்தி(30) மற்றும் செருகுடி கிராமம் உத்தராபதி மகன் பாக்யராஜ்(35) ஆகிய மூவரும் அமர்ந்து சம்பவத்தன்று பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது சீர்காழியிலிருந்து பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கு ஐஸ் ஏற்றி சென்ற மினி லாரி தாறுமாறாக ஓடி மதகில் மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதில் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  பாக்யராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து புதுப்பட்டினம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.