tamilnadu

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குக!

சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்

தஞ்சாவூர், நவ.27- தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்கப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.வீராச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தி.ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். அகில இந்திய தேசிய செயற் குழு உறுப்பினர் ஆர்.பன்னீர் செல்வம் துவக்கவுரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ஜெ.சசி கலா சிறப்புரையாற்றினார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ரெங்கசாமி, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணி யாளர் சங்கம் மாநில துணைத் தலைவர் பி.கோதண்டபாணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.பாஸ்கரன், வடக்கு வட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் எஸ்.சோம நாதராவ் நன்றி கூறினார். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து சத்துணவு ஊழியர்கள் பேரணியாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார்.  நிர்வாகிகள் வி.அன்னபூர ணம், துரை.அரங்கசாமி, கு.ராஜ மாணிக்கம், கிருஷ்ணவேணி, சீத்தா லெட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்க சாமி வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் பெ.அன்பு கோரிக்கை களை விளக்கிப் பேசினர். மாநில துணைத் தலைவர் பி.பாண்டி, மாநில செயலாளர் கு.சத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மறியல் போராட்டத்தில் 175 பெண்கள் உட்பட 207 பேர் கைது செய்யப்பட்டனர். 

பெரம்பலூர்

பெரம்பலூரில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பொன்.ஆனந்தராசு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆ.அமுதா மறியல் போராட்டத்தை தொடக்கி வைத்தார். மாவட்ட செய லாளர் கொளஞ்சி வாசு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.  அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ப.குமரி அனந்தன்,  சி.சுப்பிரமணியன், சா.இளங்கோ வன், பா.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேன் மொழி, மணிமேகலை, தையமுத்து, ஜெயந்தி, சத்தியா, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மறியலில் ஈடுபட்ட 6 ஆண்கள் உள்பட 107 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.