சத்துணவு ஊழியர் சங்கப் பேரவை
நாகப்பட்டினம், ஜூலை 28- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பேரவைக் கூட்டம், சனிக்கிழமை நாகப்பட்டினத்தில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் வி.தேன்மொழி தலைமை வகித்தார். நாகை ஒன்றியச் செயலாளர் சி.கலியபெருமாள் வரவேற்றார். சங்க மாநிலச் செயலாளர் ஆர்.அய்யம்மாள் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே. இராஜு வேலை அறிக்கையும் பொருளாளர் எஸ்.துர்காம் பிகா நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். துணைத் தலைவர்கள் எஸ்.கலைச் செல்வன், என்.புகழேந்தி, என். வளர்மதி, பி.அருண்மொழி, இணைச் செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.சித்ரா, எம்.இராஜேந்திரன், கே. பாலம்மாள் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழ கன் சிறப்புரையாற்றினார். புள்ளியியல் சார்நிலை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.அந்துவன்சேரல், சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி, வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்டச் செயலாளர் து.இளவரசன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் சித்திராகாந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ச.மதிவாணன், தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சு.மணி, அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன், ஆர்.ராஜசேகரன், டி.ரவிச்சந்திரன், சி.மச்சேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.நூர்ஜகான் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி.வாசுகி நன்றி கூறினார். 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டபூர்வமான குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூ தியமாக ரூ.9,000 வழங்க வேண்டும்; ஓய்வுபெறும் சத்து ணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்தத் தொகை ரூ.5 லட்சமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
வாலிபர் சங்கப் பயிற்சி முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 28- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட அள விலான பயிற்சி முகாம் சனிக்கிழமையன்று புதுக்கோட் டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா தலைமை வகித்தார். ‘சமூக பணியில் அறிவியல் பார்வை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், ‘அமைப்பும் இயக்கமும்’ என்ற தலைப்பில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் ஆகியோர் உரையாற்றி னர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கார்த்திக் நிறைவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் வி.இளையராஜா, பி.அருண், ஆர்.விவேகானந்தன், எம்.விஷாலினி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.