tamilnadu

img

குடிநீர், பயிர்க் காப்பீட்டுத் தொகை கேட்டு மருதூர் மக்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 11- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், மருதூர் வடக்கு கிராமத்தில் கஜா புய லுக்குப் பின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்கள் பழுதாகி இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன. கிராம மக்கள் குடிக்கக் குடிநீரின்றித் தவிக்கிறார்கள். கஜா புயலில் பாதித்த மக்களுக்கு இன்னும் நிவா ரணத் தொகை கிடைக்கவில்லை,  2017-18 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப் பட வில்லை. இவற்றிற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கள், பொதுமக்கள் சார்பில் மருதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வடவூர்  ஊராட்சி செய லர் செல்வராஜ் தலைமை வகித்தார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரணி யம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டி யன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காம ராஜ் வாய்மேடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் செந்தில் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.