tamilnadu

img

திமுக கூட்டணி முழுஅடைப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

சென்னை:
சொத்து வரி உயர்வை கண்டித்து கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி நடத்த இருந்த முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் கோவை மாநகராட்சி சொத்து வரியை 100 விழுக்காடு உயர்த்தி உள்ளதை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் பராமரிப்பு மற்றும் விநியோகப் பணியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “சூயஸ்” நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் செப்.27ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழகு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், சொத்து வரி உயர்வை சென்னை உயர் நீதிமன்றமும், மதுரைக் கிளையும் உறுதி செய்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடத்து வது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறி போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை எனவும், சட்ட விரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், செப்.27 போராட்டத்துக்கு தடை விதித்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.'