திருச்சிராப்பள்ளி, ஆக.12- பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதா ரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அனைத்து பாலையும் கொள்முதல் செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்க மணப்பாறை, மருங்காபுரி, வை யம்பட்டி கிளைகள் சார்பில் புதனன்று மண ப்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் என்.கோபாலகிருஷ்ணன் தலை மை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில பொது செயலாளர் கே.முகமதலி, விவ சாய சங்க மாவட்ட செயலாளர் வி.சிதம்ப ரம், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பி.ராமநாதன், மாவட்ட துணை தலைவர் பி.வரதராஜன். உள்ளிட்டோர் சிறப்பு ரையாற்றினர். இதில் சிபிஎம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.