பொன்மலை தியாகிகள் நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டிஆர்இயு, சிஐடியு சார்பில் வியாழனன்று பொன்மலை சங்கத்திடலில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பகுதிக்குழு செயலாளர்கள் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சம்பத், டிஆர்இயு துணைத்தலைவர் சாம்பசிவம், உதவி பொதுச்செயலாளர் மாதவன், கோட்ட தலைவர் மகேந்திரன், கோட்ட செயலாளர் கண்ணன் மற்றும் தோழமை சங்கத்தினர் பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். முன்னதாக பொன்மலை தியாகிகள் தினத்தையொட்டி டிஆர்இயு, சிஐடியுவினர் மலர் வளையத்தை கையில் ஏந்தி பொன்மலை ஆர்மரி கேட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பொன்மலை சங்கத்திடலை வந்தடைந்தனர்.