tamilnadu

img

கரூர் பரணி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்

கரூர், மே 7-சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு,10ம் வகுப்பு மற்றும் ஜே.இ.இ.அகில இந்திய தேர்வுகளில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி தேசிய,மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள் ளது. சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நிதிஷ் 485 மதிப்பெண், சாய்சிவராமன் 482 மதிப்பெண் பெற்று பள்ளி மற்றும் மாநில சிறப்பிடம் பெற்றுள்ளனர். 12ம் வகுப்புபொதுத்தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் 17 மாணவர்கள், 425 மதிப்பெண்ணுக்கு மேல் 30 மாணவர்கள், 400 மதிப்பெண் ணுக்கு மேல் 48 மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் விபா ஷ்ரேயா 488 மதிப்பெண், மாணவிகள் நிரஞ்சனா, சிவநிகிலா தலா 486 மதிப்பெண், கௌசிகன் 485 மதிப்பெண் பெற்று பள்ளி மற்றும் மாநில சிறப்பிடம் பெற்றுள்ளனர். ஜே.இ.இ. அகில இந்தியதேர்வில் கபிலன் 98 பெர்சென்டைல், கணேஷ் 96.68 பெர்சென்டைல், லீனாஇளமதி 95.66 பெர்சென்டைல் பெற்று தேசிய சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும் 15 மாணவர்கள் 90 பெர்சென்டைலுக்கு மேல் பெற்று தேசிய சிறப்பிடம் பெற்றுள்ளனர். சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் தேசிய நுழைவு தேர்வில்இதுவரை 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வில் இதுவரை எட்டு பேர் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.சாதனை மாணவர்கள், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் டாக்டர் சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் இரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின், குரோத் அகாடமிநீட் தேர்வு பயிற்சி மைய செயலர் கவிதா ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், நிர்வாக அலுவலர் சுரேஷ், அறங்காவலர் சுபாஷினி மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.