திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38-வது, 42-வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் கலங்கல் இல்லாமல் வழங்க வேண்டும். பாதாளச் சாக்கடை திட் டத்தை அமல்படுத்த வேண்டும். காவிரி குடிநீர் இணைப்பு இல்லாத பகுதி களுக்கு காவிரி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து தெருக் களுக்கும் சாலை, சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசு அரிசி குடோன்களில் இருந்து வரும் விஷவண்டு தொல்லையிலி ருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். மக்கள் மீது சுமத்திய வரியை குறைக்க வேண்டும். நாய் மற்றும் கொசு தொல்லையிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக் குழு கே.கே.நகர் கிளை சார்பில் செவ் வாயன்று கே.கே.நகர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் மகா லிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவி.வெற்றிச்செல்வன், பகுதிசெயலாளர் வேலுச்சாமி ஆகி யோர் பேசினர். மூத்த தோழர் எஸ்.ஆர்.பாலன், பேராசிரியர்கள் கண்ணன், ஜூலியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லெனின், சின்னையன், சதாசிவம், கிளை செய லாளர்கள் நிர்மலா, ராஜேஸ்வரி, சிரா ஜூதீன், கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.