tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடுவேன்: எம்.செல்வராசு எம்.பி.

நாகப்பட்டினம், மே 26-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து, 11 ஆயிரத்து 353 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றி பெற்ற எம்.செல்வராசு சனிக்கிழமை வேதாரணியம் பகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் சர்தார் வேதரெத்தினம், வைரப்பன் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது அவர், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் மக்களோடு இணைந்து போராடுவேன் திருத்துறைப்பூண்டி, வேதாரணியம்- அகஸ்தியம்பள்ளி வரை அகல ரயில் பாதையை விரைவுப்படுத்தச் செய்வேன்” என மக்களிடையே தெரிவித்தார். இந்நிகழ்வில் சி.பி.ஐ.மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் சிவகுரு பாண்டியன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காமராஜ், தி.மு.க.நகரச் செயலாளர் புகழேந்தி, ஒன்றியச் செயலாளர் மாசி மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.