tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு விளக்கப் பேரவை

சீர்காழி, மே 27-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டச் செயலாளர் வி.எஸ்.துமிழ்வேந்தன் தலைமையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரவைக்கூட்டம் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தனது சிறப்புரையில், சீர்காழி தாலுகாவில் மடவாமேடு, புதுபட்டினம், பழையாறு சுனாமி நகர்,புளியந்துறை, நாதல்படுகை, அளக்குடி, ஆச்சாளுபுரம், பாயிண்டு 2  புளியந்துறை. ஆகிய பாயிண்டுகளை ஏற்கனவே மத்திய அரசு ஓ.என்.ஜி.சி.யிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது, இன்னும் டெண்டர் விடாத நல்லவினாயகபுரம், திருவாலி நிம்ஆமலி, தில்லையாடி, அய்வநல்லூர், சோழசக்கரநல்லூர், ஆணதண்டாபுரம், பந்தநல்லுர்ர், டி.மணல்மேடு போன்ற எண்ணற்ற கிராமங்கள் இருக்கின் றன என்றார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வி.ஆர்.ஜீவானந்தம், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.நாகையா, சி.ராஜேந்திரன், கே.கேசவன், ஆர்.நீலமேகம், பி.விஜய், ஆர்.இந்திராகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சி உறுப்பினர்கள், மாதர்கள், வாலிபர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.