tamilnadu

img

திடீர் மழையால் அறுவடை : நெற்பயிர்கள் பாதிப்பு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.20- திடீர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கடும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தஞ்சை ஆட்சியரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.35 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் அம்மாபேட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், பாபநாசம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் புகையான் நோய் தாக்குதல், கூடுதல் உயரம் வளர்ச்சி காரணமாக கோ-50, 1009 நெல் ரகங்கள் பெரும்பாலும் சாய்ந்து வயல் மண்ணோடு நெற் கதிர்கள் கிடந்தன. மேலும் பொங்கல் பண்டிகை மற்றும் நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காமல் அறுவடை பணி நடைபெறாமல் இருந்தது.  இந்த நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக நெற்கதிர்கள் மண்ணுடன் இணைந்து முளைக்கும் தருவாயில் காணப்படு கிறது. எனவே உடன் வேளாண்மை துறை அதி காரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட் டிற்கான மகசூல் இழப்பீடு கணக்கீட்டு பணியில், விவசாயிகளின் பாதிப்பை கவனத்தில் கொண்டு நடத்திட வேண்டும்.

படுத்துள்ள நிலையில் நெற்கதிர்கள் உள்ள தால் அறுவடைக்கு கூடுதல் நேரமாகும். எனவே, நெல் அறுவடை இயந்திரத்திற்கு மாவட்ட நிர்வாக மும், வேளாண் பொறியியல் துறையும், நிர்ண யித்த செயின் டைப் வண்டிக்கு ரூ 2,000 என்பதை யும், டயர் டைப் வண்டிக்கு மணிக்கு ரூ, 1,500 என்பதை மட்டும் விவசாயிகளிடம் பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.  மேலும் மழையைக் காரணம் காட்டி நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழல் முறைகேடு களை களைந்திட வேண்டும். தினமும் ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதலை உறுதி செய்திட வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதலை மறுக்கக் கூடாது” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

அறந்தாங்கி 

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் தாலுகா பெருமருதூரில் விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் ஞாயிறு மாலை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க, எம்.எஸ் செல்லத்துரை தலைமை வகித்தார். வி தொ.ச எஸ்.முத்தீஸ்வரன் முன்னிலை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் பூவலூர், கீழ்க்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் கதிர்முற்றும் தருவாயில் குலைநோய், எடப்பழம், ஆனை கொம்பன் தாக்கு தலில் மிகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தினர். விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர், சி. சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ், வி.தொ.ச. மாவட்ட துணைத் தலைவர் வீரையா, விவசாய சங்க நிர்வாகிகள் எம்.எஸ் கலந்தர், எஸ்.அழகர், விவசாயத் தொழி லாளர் சங்க நிர்வாகிகள் வைரமணி, கூத்த பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.