தஞ்சையில் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்/திருவாரூர், அக்.30- அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் மருத்துவர்க ளுக்கு காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கோரி அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஆறாவது நாளாக புதன்கிழமையன்று வேலைநிறுத்த போராட்டம் மற்றும் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் காலவரை யற்ற தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். கோரிக்கை களை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கோரிக்கை விளக்க பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜேஷ் ராம் தலைமை வகித்தார். போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சிவகுரு, மாநகரக் குழு உறுப்பினர் அப்துல் நசீர், சிஐடியு நிர்வாகிகள் கே.அன்பு, ஈ.டி.எஸ். மூர்த்தி, மருந்து விற் பனை பிரதிநிதிகள் சங்கம் பாலா, முறைசாரா தொழிலாளர் சங்கம் மணிமாறன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நேரில் சந்தித்து கோரிக் கைகளை ஆதரித்து பேசினர். தஞ்சை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொடர்ந்து ஆறா வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்வூதியர் சங்கம்
தமிழக முழுவதும் கடந்த அக்டோபர் 25 ம் தேதி முதல் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக அரசு மருத்துவர்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும் கும்பகோணம் அனைத்துத் துறை அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஆர்.ராஜகோபால், மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி, பக்கிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட் டத்தை விளக்கி பேசினார். சங்க பொ றுப்பாளர்கள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவ பாரதி, நகரச் செயலாளர் செந்தில் குமார், அரசு ஊழியர் சங்க பொறுப் பாளர்கள் மருத்துவர்களுக்கு ஆதர வாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிபிஎம் ஆதரவு
போராட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரியும் இருபால் மருத்துவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து சிபிஎம் தலை வர்கள் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மாநில செய லாளர் உ.சண்முகம், மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம், துணைத்தலைவர் வி.சிவக்குமார், நிர்வாகிகள் செங்குட்டுவன், கார்த்திக்கேயன் உட்பட பலர் போராட்டத்தை ஆதரித்து உரை யாற்றினர்.