tamilnadu

img

போராடும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வலியுறுத்தி சுகாதாரத்துறை நோட்டீஸ்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வலியுறுத்தி சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 தேதி துவங்கிய வேலை நிறுத்த போராட்டம்  6  நாட்களாக  நடைபெற்று வருகிறது.   சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நுழைவாயில்  200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
இது தொடர்பாக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பணிக்கு வராத மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசு மருத்துவர்கள் நோயாளிகள் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும். போராட்டம் தொடர்ந்தால் மக்கள் நலனை பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நியாயமான கோரிக்கைகளை அரசு பரீசிலிக்கும் என அறிவித்த பின்பும், போராட்டம் நடத்துவது நல்லதல்ல மிரட்டல் விடுத்துள்ளார்.