tamilnadu

img

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

சென்னை, நவ. 1-  4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நடைபெற்று  வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்  காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக மருத்து வர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  காலமுறை ஊதியம், பிற மாநிலங்க ளுக்கு நிகராக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலி யுறுத்தி வருகின்றனர். அதுதொடர்பாக ஆய்வு செய்ய அரசுத் தரப்பில் குழு அமைக்  கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தையும், உண்ணா நிலைப் போராட்டத்தையும் அரசு மருத்துவர்  சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஃபோக்டா)  கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற் கொண்டு வந்தனர்.

இந்நிலையில்  கடந்த 7 நாட்களாக  4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்று வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம்,  முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று  தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு  மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் கூறினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்து வர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனால் தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த மருத்துவர்கள் அனைவரும்  பணிக்கு திரும்பினர்.

பணி முறிவு நடவடிக்கை வாபஸ்

இதனிடையே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள ஒரு  அறிக்கையில் வேலை நிறுத்தப் போராட் டத்தை வாபஸ்பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளதால்  போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட பணி முறிவு (பிரேக் இன் சர்வீஸ்) நடவ டிக்கை திரும்பப் பெறப்படுவதாக  முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதன்படி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். அதே நேரத்தில் நோயாளிகளுக்கு இடை யூறு ஏற்படுத்தியதாக மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது  காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.