திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்கு ழுவின் திருச்சி மாவட்ட 3வது மாநாடு திருச்சி புத்தூர் ஒய்எம்சிஏ வளாகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு திருச்சி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வின்சென்ட் தலைமை வகி த்தார். மாநாட்டை சமூக ஆர்வலர் ஸ்ரீதர் தொட ங்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் ராஜா, ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். செயலாளர் அறிக்கையை மாவட்டச் செய லாளர் ரபீக்அஹமத் வாசித்தார். மாநாட்டில் குடியுரிமை சட்டம் என்றால் என்ன? என்ற தலைப்பில் மாநில துணைத்த லைவர் ஹாஜிமூசா, இந்திய அரசியலமைப்பு சட்டமும் சிறுபான்மையினர் நிலையும் என்ற தலைப்பில் ஃபாதர் அமுதம் அடிகளார் ஆகி யோர் பேசினர். இந்திய மக்களில் கோடிக்கணக்கா னோருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாத சூழ லில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை முஸ்லீம் மட்டுமல்ல இந்துக்கள் உட்பட அனைவரையும் பாதிக்கும். எனவே சிஏஏ சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். என்பிஆர் மற்றும் என்ஆர்சியை மாநில அரசு அமலாக்க கூடாது. தில்லி கலவரத்தை தூண்டிவிட்டு நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். கல வரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் வாழ்வா தாரம் இழந்தவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். தலித் கிறித்துவர்களை அட்டவணை பட்டியலில் சேர்க்க வேண்டும். தொழில் தொடங்க சிறுபான்மை மக்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். விடுதலை போராட்ட வீரரான ஜார்ஜ் பாரிஸ்டருக்கு மதுரையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட தலை வராக வழக்கறிஞர் டி.வின்சென்ட், செயலா ளராக எம்.ஐ.ரபீக்அஹமத், பொருளாளராக ஜாகீர்உசேன், புறநகர் மாவட்டத் தலைவ ராக எம்.கே.தங்கராஜ், செயலாளராக எஸ். எம்.ஷாஜகான், பொருளாளராக அப்துல்ரகு மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் அன்வர்உசேன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் நன்றி கூறினார்.