திருச்சிராப்பள்ளி, பிப்.11- மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் அரிச்சந்தி ரனை தற்கொலை செய்ய தூண் டும் விதமாக செயல்பட்ட மதுரை மாவட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தின்படி இல்லாமல் ஓலா, ரேபிடோ, ஊபர் போன்ற கார்ப்பரேட் கம் பெனிகள் இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திருச்சி மாந கர் மாவட்ட சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிழக்கு பகுதி தலைவர் வி.சரவணன், காட்டூர் பகுதி தலைவர் எஸ்.சர வணன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செய லாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில துணை செயலாளர் பக்ருதீன்பாபு, மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.