மன்னார்குடி, ஆக.26- திருத்துறைப்பூண்டி இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் லெட்சுமி நாராயணன், வாடிக்கையாளர்களிடம் வங்கியின் சேவைகளை பற்றி கேட்டறிந்தார். இதில் முன்னணி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், மகளிர் குழுக்கள், ஆடவர் குழுக்கள் உள்ளிட்டோர் வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக்கடன் உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்களை முதுநிலை மேலாளரிடம் வழங்கினர். மேலும் வாடிக்கையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி கூறினார். வங்கியின் துணை மேலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.