திருச்சிராப்பள்ளி, ஜூலை 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருந்ததாவது: திருச்சி மாவட்டத்தில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நி லையில் எங்களது கட்சியின் சார்பில் தொற்று நோயை கட்டுப்படுத்தி பொதுமக்கள் உயிரை பாதுகாக்க கோரி 21.7.2020 அன்று மாந கரத்தில் 64 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில் முக்கியமாக தினமும் 5000 பேர் பரிசோதனை முடிவுகளை 5 நாட்கள் கழித்து வெளியிடாமல் 24 மணி நேரத்தில் வெளியிடு வது, அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி, மருத்துவர்கள், பணியாளர்கள், மருத்துவ கருவிகள், மருந்துகள் கூடுதலாக இரு ப்பதை உறுதிப்படுத்துவது போன்றவைகள் அதிகப்படுத்திட வேண்டும். மேலும் கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமா வது என்பது அச்சத்தை ஏற்ப்படுத்துகிறது. அதே போல் காய்ச்சல் முகாம், நடமாடும் சோதனை வாகனம், வீடு வீடாக சோதனை, 18 ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவ மனைகளில் பரிசோதனை போன்ற கோ ரிக்கைகளை வலியுறுத்தி இருந்தோம்.
இதன் மீது சுகாதார துறை கவனம் செலு த்துவதன் மூலம் கொரோனா பரவலின் மூன்றாம் கட்ட பாதிப்பை தடுக்க முடியும். மேலும் எங்களது கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும் சிஐடியு மாவட்ட தலைவரு மான ஜி.கே.ராமருக்கு சோதனை செய்து 6 நாட்களுக்கு பிறகே கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு அன்று இரவு அவரது அருகில் படுக்கையில் இருந்த நோயாளி சுமார் 20 நிமி டம் வரை சுவாச கருவி பொருத்தாமல், மருத்து வர் வராமல் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் நடந்ததையொட்டி தன் விருப்ப த்தின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டார். அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படவில்லை என்ற புகார் தொடர்ச்சியாக சமீப நாட்களாக வந்து கொண்டிருக்கிறது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும் ராமர் மகன் நந்தகுமார் (11) என்பவருக்கு சோ தனை எடுக்கப்பட்டு 5 நாட்களுக்கு பிறகு மரு த்துவமனை மூலம் கைபேசியில் நெகட்டிவ் என தகவல் வந்தது. பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு மாநகராட்சி மூலம் கைபே சியில் பாசிட்டிவ் என்று முடிவு குறுத்தகவல் வந்துள்ளது. இதில் எது உண்மை என எடுத்துக் கொள்வது என்பது குழப்பத்தையும் மன வேதனையும் ஏற்படுத்தியுள்து. இது சோ தனை மற்றும் கொரோனா நோயாளிகளை கையாள்வதில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தடுமாற்றமாகும். இதுபோல் ஏராளமான குள றுபடிகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.