திருச்சிராப்பள்ளி, ஆக.1- மோடி அரசின் புதிய வரைவு கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சிபிஎம் கட்சிக்கிளை சார்பில் புதன் கிழமை தீரன்நகர் பஸ் ஸ்டாண்ட் அரு கில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சிபிஎம் கட்சிக்கிளை உதவி செய லாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். லெட்சுமணன் துவக்கவுரை யாற்றினார். சிஐடியு மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன், கிளை தலைவர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பின்னர் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்தில் அப்பகுதி பொது மக்களிடம் கையெழுத்து பெறப் பட்டது. இதே போன்று மார்கிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டக்குழு சார்பில் மணப்பாறை முழுவதும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. வட்ட செய லாளர் ராஜகோபால் தலைமை வகித் தார். பிரச்சாரத்தை விளக்கி வட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கண்ணன், கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பையா, ஷாஜகான், முத்துசாமி, சுரேஷ், சரஸ்வதிராஜாமணி, வேலு சாமி, ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நவமணி, மூத்த தோழர் இள மாறன், வாலிபர் சங்க சங்கர்ராஜ், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.