பொன்னமராவதி, பிப்.8- குடியுரிமை திருத்த சட்டம் 2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றை யும் எதிர்த்து பொன்னமராவதியில் மத ச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக தெற்கு ஒன்றியச் செய லாளர் அடைக்கலமணி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக நகர செயலாளர் அழ கப்பன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள், சிபிஎம் ராமசாமி, சிபிஐ ராசு, உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் பொன்னமராவதி பேரு ந்து நிலையம் கடை வீதி பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற னர்.
ஆடுதுறை பள்ளிவாசல்
கும்பகோணம் அருகே உள்ள ஆடு துறை முஹையத்தீன் ஆண்டவர் பள்ளி வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் வெள்ளிக்கி ழமை தொழுகைக்கு பிறகு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஜமாஅத் தலைவர் முகமது அலி தலைமை வகி த்தார். ஜமாஅத் செயலாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலச் செயலாளர், தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.