tamilnadu

img

காலமானார்

திருச்சிராப்பள்ளி, ஜன.18- திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ ஊழியர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபக தலை வர்களில் ஒருவரும் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பின ருமான தோழர் அழகப் பன்(62) கடந்த வெள்ளி யன்று உடல் நலக்குறைவால் காலமானார். ஆட்டோ ஊழியர் சங்கத்தினர், கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக தோழர் அழ கப்பன் உடல் இனியானூர் வர்மாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு சனிக்கிழமை நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு ஆட்டோ சங்க  மாவட்டச் செயலாளர் மணி கண்டன் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் ராமர், பக்ருதீன்பாபு, ஆட்டோ பாது காப்பு சங்க கோபி, தரைக் கடை சங்க கணேசன் ஆகி யோர் இரங்கல் உரையாற்றி னர்.  மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.வி.எஸ.இந்துராஜ், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிரவாஜன், புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.