tamilnadu

img

விவசாய தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு லால்குடி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4-  திருச்சி மாவட்டம் லால்குடி நகர் ஊராட்சியில் குறுவை சாகுபடி வேலைக்கு நாற்று நடவுக்கும், களை எடுப்பு உள்ளிட்ட தினசரி கூலி வே லைக்கும், ஆண் தொழிலா ளர்களுக்கான மண்வெட்டி வேலைக்கும் கூலி உயர்வு கோரி கடந்த ஜுன் 27 அன்று  முதல் 7 வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் நடை பெற்று வருகிறது. நகர் ஊரா ட்சியில் இருமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் உட ன்பாடு ஏற்படவில்லை.  வருவாய்த்துறை அதிகா ரிகள் கோட்டாட்சியர், வட்டா ட்சியர் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பா டுகள் செய்யவில்லை. ஆகவே முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனை க்கு உடனே தீர்வு காண வலி யுறுத்தி வெள்ளியன்று விதொச மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி தலைமையில் லால்குடி கூட்டுறவு வங்கி  முன்பிருந்து விவசாய தொழி லாளர்கள் ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த  மாவட்ட துணை கண்கா ணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் வருவாய் வட்டாட்சி யர் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தையில் மிராசுதார்கள் தரப்பில் பங்கேற்கவில்லை. ஆகவே மிராசுதார்களை  அழைப்பாணை மூலம் பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இத னையடுத்து பேச்சுவார்த்தை சனிக்கிழமை காலை 11  மணிக்கு நடத்திட தீர்மானிக்க ப்பட்டது. முற்றுகை போரா ட்டத்தில் சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், விதொச மாவ ட்ட செயலாளர் அ.பழ நிசாமி, விதொச மாநிலக்குழு  உறுப்பினர் எஸ்.சந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சி.ஜெகதீசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.ரஜினிகாந்த்,  வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் எல்.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.