tamilnadu

அரியலூர் மற்றும் பெரம்பலூர் முக்கிய செய்திகள்

சேதுபாவா சத்திரத்தில் இன்று மின்தடை

தஞ்சாவூர், மே 29- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெறு வதால் சனிக்கிழமை காலை  10 மணி முதல் மாலை 2 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், செந்த லை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, குருவிக் கரம்பை, பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை, பேராவூரணி நகரில் சேது  சாலை பகுதியில் மட்டும் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறி யாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 

பாபநாசத்தில் புதிய வணிக வளாகம் திறப்பு

கும்பகோணம், மே 29- தஞ்சை மாவட்டம் பாப நாசத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள ரூ.90 லட்சம் மதிப்பிலான வணிக வளாக கட்டடம் நீண்ட நாளாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வெள்ளியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் 15 கடை களும் இரண்டு பயணிகள் காத்திருப்பு அறையும் ஒரு ஏடிஎம் அறையும் நேரக் காப்பாளர் அறையும் மற்றும் ஓய்வு அறையும் அடங்கும். நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பிரபாகர், செயல் அலுவலர் கார்த்தி கேயன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரகுரு உள் ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே மகனை கொன்ற பெற்றோர்:  8 பேர் கைது

பெரம்பலூர், மே 29- பெரம்பலூர் மாவட்டம் பாண்டக பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி-சரஸ்வதி தம்பதியரின் மூத்த மகன் முத்தையன் (30), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இவருக்கு கடந்த சில வருடங்களாக மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால் அதனை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த முத்தையனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாண்டகபாடியிலிருந்து வெண்பாபூர் செல்லும் சாலையில் கருப்பையா கோவில் பகுதியில் கழுத்தில் லுங்கியால் இறுக்கிய நிலையில் முத்தையன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த தகவலின் பேரில் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரி ழந்து கிடந்த முத்தையனின் சட லத்தை கைப்பற்றி விசாரணை மேற் கொண்டனர். முதற்கட்ட விசாரணை யில், பெற்றோரிடம் ஏற்பட்ட தகரா றில் மனமுடைந்து வீட்டை சென்ற முத்தையன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.  இதனால் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக தாய் தந்தையர் பிரிந்து தனி தனியே வசித்து வந்ததாகவும், முத்தையன் வெளிநாட்டில் வேலை பார்த்த போது அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டதால் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோத லில் பெற்றோர் உள்ளிட்ட அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து முத் தையனை லுங்கியால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முத்தை யனின் தந்தை ராமசாமி, தாய் சரஸ்வதி மற்றும் அதே ஊரை சேர்ந்த உறவினர்களான கருப்பை யா உள்பட எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவுகள்  அரியலூர் ஆட்சியருக்கு சிஐடியு கோரிக்கை

அரியலூர், மே 29- சிஐடியு அரியலூர் மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் போது அரசு 50 சதவீத ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் வேலை பார்க்கலாம் என்று அறிவித்து உள்ளது, அதன் அடிப்படையில் தொழிலாளர் துறை நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நலவாரிய அட்டைகளில் சரிபாதி மறுபதிவு செய்யப்படாமல் உள்ளது.  மறுபதிவு செய்யாவிட்டால், சலுகைகள் கிடைக்காது. இறப்பு ஏற்பட்டால் சலுகை பெற முடியாது, பல வருடமாக நலவாரிய அட்டை பெற்று இருந்தாலும் மறுபதிவு அவசியம், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலாலும், ஊரடங்கு அமலில் இருப்பதாலும் தொழிலாளர் நலவாரியம் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனாலும் மறுபதிவு செய்யாமல் இருப்போர் உள்ளார்கள், அதனால் தொழிலாளர் நலவாரியத்தில், நலவாரிய அட்டைகளை மறுபதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வைரஸ் பரவாமல் தடுக்க தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வராமல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மூலம் மறுபதிவு செய்திடலாம் என உத்தரவிட்டு நலவாரிய உறுப்பினர்கள் பாதுகாத்திட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.