tamilnadu

img

குறிச்சி ஐபிஇஏ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், ஏப்.24-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் சுகாதாரமான காற்றோற்ற வசதியுடன் உள்ளது ஐபிஇஏ (IBEA) பள்ளி ஆகும். இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் மூலம் கடந்த2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. தரத்தை மட்டும் முக்கியநோக்கமாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளியில் பயின்றமாணவர்கள் தற்போது பொறியியல், மருத்துவம் உள்ளிட்டபல்வேறு பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். குறிச்சியில் 2012-2013 கல்வியாண்டில் பயின்ற முன்னாள்மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளியில் ஒரு சந்திப்பு இயக்கம் நடத்தினர். ஐபிஇஏ பள்ளியில் தமிழ்வழியில் பயின்றமாணவர்கள் பி.இ, பல பிரிவுகளிலும் பிஎஸ்சி விவசாயப்பிரிவு, பிஎஸ்சி நர்சிங், பிஎட் என பல பிரிவுகளில் தங்களைமேன்மைபடுத்தியுள்ளனர்.ஒரு மாணவர் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் இவ்வருடம் பொறியியல் படிப்பு முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் வாசுகி வரவேற்றார். பள்ளி தாளாளர் ஜி.பாலச்சந்திரன் மாணவர்களை வாழ்த்திப் பேசினார். நீண்ட நாள் இடைவெளிக்குப் பின்னர்முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.