tamilnadu

திருச்சி மத்திய சிறைச்சாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு

திருச்சிராப்பள்ளி, ஏப்,22- தமிழகம் முழுவதும் புழல், திருச்சி, திருச்சி மகளிர் சிறை வேலூர், கடலூர், சேலம், மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய சிறைகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து புதுப்பிக்க சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் சிறைத்துறை பணியாளர்களின் காலிப்பணியிடங்களையும் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மத்திய சிறைக்கு ரூ 2.95 கோடியிலும், திருச்சி மகளிர் சிறை ரூ 50.51 லட்சத்திலும் அடிப்படை வசதிகள், மராமத்து பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த மராமத்துப் பணிகளுக்காக நிதியை அரசின் சிறைத்துறை நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.