tamilnadu

img

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆக்கிரமிப்பு அனைத்துக் கட்சியினர் புகார் மனு

கும்பகோணம், செப்.27-  கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் திடீரென்று கோயில் உருவாக்கி செய்யப்பட்டுள்ள இட ஆக்கிரமிப்பை அகற்றச் சிபிஎம், திமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் தெரிவித்திரு ப்பதாவது; கும்பகோணத்தில் உள்ள அரசு தன்னாட்சி கல்லூரியில் தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்ததும் காவிரிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தோடு அமைந்துள்ள இக்கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள் அனைத்து ஜாதி மதங்களைச் சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் இக்கல்லூரியில் உள்ள விளையாட்டு திடல் அருகில் திடீரென்று கோயில் ஏற்படுத்தி அதற்கு மேற்கூரை (தகரச் சீட் )போட்டு அதைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் இடம் முள்வேலி கட்டி மறைத்து வைத்துள்ளனர் இங்குக் கல்லூரியில் உள்ள சிலரும் வெளி ஆட்கள் சிலரும் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர் பழம்பெருமை வாய்ந்த கல்லூரியில் ஏற்கனவே கட்டிடங்கள் கட்ட இடநெருக்கடி உள்ளது இச்சூழலில் சுமார் ஒரு ஏக்கர் இடம் ஆக்கிரமித்து வேலி போட்டு உள்ளனர்.  மேலும் இது ஒரு அரசு கல்வி நிறுவனம் மதச்சார்பற்ற நிறுவனம் ஆகும். இங்கு ஒரு சமூகம் சார்பில் கோயில் உருவாக்கியது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும் இக்கோயிலை வைத்துச் சுமார் ஒரு ஏக்கர் நிலம் முள் வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளனர் எனவே தங்கள் கல்லூரி வளாகத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கோயிலையும் முள்வேலியையும் அகற்றிடவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், நகரச் செயலாளர் செந்தில்குமார் ஒன்றியக் குழு உறுப்பினர் நாகமுத்து திமுக நகரச் செயலாளர் தமிழழகன் விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் தமிழருவி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் உடன் இருந்தனர்.